அகமதாபாத் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது, இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 11-வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை தடுத்த மிட்செல் மீது, அர்ஷ்தீப் எதிர்பாராத விதமாக பந்தை எறிந்ததே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த மிட்செல் அர்ஷ்தீப்பை நோக்கிச் செல்ல, இருவரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் நடுவர்கள் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
Final Hungama : Daryl Mitchell 🆚 Arshdeep Singh
Surya ಬಂದ ಮೇಲೆ ಎಲ್ಲವೂ ಶಾಂತ… SKY Handle ಮಾಡಿದ ರೀತಿ ನಿಜಕ್ಕೂ ಅದ್ಬುತ!👏🏻🤝🏻
ವೀಕ್ಷಿಸಿ | ICC Men’s #T20WorldCup 👉🏻 FINAL | #INDvNZ | LIVE NOW | ನಿಮ್ಮ Star Sports ಕನ್ನಡ & JioHotstar ನಲ್ಲಿ.#T20WorldCup2026Final pic.twitter.com/K4ECnGh9ra
— Star Sports Kannada (@StarSportsKan) March 8, 2026
இந்தச் சம்பவம் மைதானத்தில் தற்காலிகமாகப் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், அந்த ஓவர் முடிந்த உடனேயே அர்ஷ்தீப் சிங் மிட்செலிடம் சென்று மன்னிப்பு கேட்டார். ஆட்டம் முடிந்த பிறகு ஹர்ஷா போக்லேவிடம் பேசிய அர்ஷ்தீப், தான் ஸ்டம்பை குறிவைத்துதான் பந்தை எறிந்ததாகவும், அது தவறுதலாக மிட்செல் மீது பட்டுவிட்டதாகவும் விளக்கமளித்தார். உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற ஒரு அழுத்தமான ஆட்டத்தில் ஏற்பட்ட இந்த சிறிய மோதல், அர்ஷ்தீப்பின் மன்னிப்பால் சர்ச்சையின்றி சுமூகமாக முடிவுக்கு வந்தது.
