இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி விரைந்து தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களைத் தொடர்ந்து தற்போதும் தெலுங்கானாவில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு 10 நாட்கள் முடிவடைந்துள்ளன. இந்த விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ககார்த்தியா பல்கலைக்கழகம் தனது கல்லூரிகளுக்கு மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் கல்லூரிகள் தொடங்கப்படும் எனவும்,பட்டப்படிப்பு களுக்கான நாலு மற்றும் ஆறாவது செமஸ்டர் தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.