ஹரியானா அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஹரியான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு மதுபான பாட்டில்கள் PETபாட்டில்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கொள்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை புதிய கலால் கொள்கையின்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களில் ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி அங்கு பணியாற்று ஊழியர்கள் பீர் மற்றும் ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை அருந்தி கொள்ளலாம். குறைந்தபட்சம் ஐந்தாயிரம் பணியாளர்களைக் கொண்ட அலுவலகங்கள் மற்றும் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட வளாகத்திற்கும் இந்த கொள்கை பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.