இந்தியாவில் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வரை மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சனையின் காரணமாக மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா முடிவடைந்த பிறகு ரயில்கள் வழக்கம் போல் ரயில்கள் இயங்கிய நிலையிலும் இதுவரை மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில் கடந்த நிதியாண்டை விட தற்போது பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வருவாய் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ரயில்வே நிர்வாகத்தின் வருவாய் அதிகரித்து வருவதால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தற்போது ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதால் மீண்டும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.