தென்மேற்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே அதிதீவிர புயலாக இன்று மோக்கா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் புயலின் தாக்கம் வங்கதேசத்தில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மறுப்புரம் புயலை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.