வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக உருவெடுத்துள்ளது என்று சென்னை வானிலை மையம்  அறிவித்துள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு வடகிழக்கே நகர்ந்து நாளை மாலை மத்திய வங்கக் கடலில் மிகத்தீவிர சூறாவளிப் புயலாக வலுவடையும். ஈரப்பதத்தை புயல் ஈர்த்தப்படி வடக்கு நோக்கி செல்வதால் இனி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே.14 வரை செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கேட்டுகொண்டுள்ளார். இதுபற்றி பேசிய அவர், மீனவர்கள், படகுகள் வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே, கடலுக்கு சென்றுள்ள மீன்பிடி படகுகள் விரைவாக கரை திரும்பவும் அறிவுறுத்தியுள்ளார்.