நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மே மாதம் பிறந்ததை முன்னிட்டு, கருப்பு நிற உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அவர், “மே (என்) மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மே 4-ஆம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், தனது பிறந்தநாள் மாதத்தை வரவேற்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
