மேஷம் ராசி அன்பர்களே,

இந்த நாள் கவலைகளை மறந்து பணிகளில் ஈடுபடும் நாள் என்று சொல்ல முடியும். தொழில் வளர்ச்சிக்கு போடும் திட்டம் வெற்றியை க் கொடுக்கும். கையிருப்பு குறையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். மன குழப்பம் ஏற்பட்டாலும் சரியாகும். திட்டமிட்டு செயல்படுவது காரியவற்றிற்கு உதவும். பெண்கள் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்வீர்கள். மன மகிழ்ச்சி பொங்கும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனை விலகி செல்லும். இன்று மாணவர்கள் பொறுமையுடன் பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்த பாடங்களை எழுதி பார்ப்பது சிறப்பு. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் மூன்று

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்