மேஷம் ராசி அன்பர்களே,

இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். இனிய கனவுகள் மேலோங்கும். தனவரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். திடீர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் முடிவாகும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்த்து விட வேண்டும். திறமையால் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவெடுங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இன்று எல்லோருடைய நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவுடன் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் வெற்றிக்காக போராடுவீர்கள். முழு முயற்சி எடுத்தால் அனைத்திலும் சாதிக்க முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்