இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவெடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மொத்தம் 13 நாட்கள் விடுமுறை முடிவடைந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜூலை 28ஆம் தேதி ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் அஷூரா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 29ஆம் தேதி மொஹரம் பண்டிகை முன்னிட்டு பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மும்பை, நாக்பூர், புது டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூலை 30ஆம் தேதி வார இறுதி நாள் என்பதால் அனைத்து மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.