
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மேம்பாலத்திலிருந்து 3 வாலிபர்களும் தூக்கி கீழே வீசப்பட்ட நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
அதன் பிறகு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து நடந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ఫ్లైఓవర్ పై ఘోర రోడ్డు ప్రమాదం.. ఇద్దరు మృతి
విశాఖ – ఎన్ఏడి ఫ్లైఓవర్ పై డ్యూక్ బైక్ పై అతివేగంతొ డివైడర్ను ఢీకొని ఫ్లైఓవర్ పై నుండి కింద పడ్డ ముగ్గురు యువకులు.
ఇద్దరు మృతిచెందగా.. ఒకరికి తీవ్ర గాయాలు అవ్వడంతో ఆసుపత్రికి తరలించిన పోలీసులు. pic.twitter.com/KlTulxtr5Y
— Telugu Scribe (@TeluguScribe) May 12, 2024