போஜ்புரி இசை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் தனஞ்சய் சர்மா. இவர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நேரலை இசை நிகழ்ச்சியில், பெண் ஆடல் கலைஞர் ஒருவரை மேடையிலிருந்து தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் பாடல் பாடிக்கொண்டிருந்த தனஞ்சய் சர்மா, திடீரென அங்கு நடனமாடிக்கொண்டிருந்த பெண் கலைஞரை ஆக்ரோஷமாகப் பிடித்து தள்ளியுள்ளார். கீழே விழுந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் வீசியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சியைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “நீங்கள் செய்வது தவறு, அவர் ஒரு பெண், அவரிடம் இப்படி நடந்துகொள்வது முறையல்ல” என தொகுப்பாளர் மேடையிலேயே அவரைச் சாடினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியுள்ள நிலையில், “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலை இத்தகைய நபர்கள் உருவாக்குகிறார்கள்” எனப் பலரும் தனஞ்சய் சர்மாவைக் கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். சர்ச்சைகள் வெடித்ததைத் தொடர்ந்து, தனஞ்சய் சர்மா தனது தரப்பு விளக்கத்தை வீடியோ மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

வீடியோவை மட்டும் பார்த்து என்னை மக்கள் தவறாகச் சாடுகிறார்கள். உண்மை அதுவல்ல. பாடலின் ஒரு காட்சிக்காக நாங்கள் முட்டிக்கொள்ளும் ( வகையில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பெண் கலைஞர் என்னை மேடையிலிருந்து கீழே தள்ள முயன்றார். நான் அவரை மேடையை விட்டுத்தான் தள்ளினேன், கூட்டத்திற்குள் வீசவில்லை. தவறுதலாகத்தான் அவர் கூட்டத்திற்குள் விழுந்துவிட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் தன்னைப் பலமுறை தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் தன் அந்தரங்க உறுப்பை அதாவது மார்பகத்தை தொட்டால் எனவும் அதனால் தான் கீழே தள்ள முயன்றேன் எனவும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by DjBittu Mairwa (@djbittu_mairwa)

தனஞ்சய் சர்மாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது அவர் மீதான குற்றச்சாட்டு உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, முசாபர்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட முழு வீடியோவையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் கலைஞருக்கு நேர்ந்த இந்த அவமரியாதை,  கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.