பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை கண்ட அந்த நபர் அதை சுரண்டிப் பார்த்து அதில் உள்ள எண்களை குறித்து வைத்துள்ளார். பின் மோசடி நபர்கள் அவரை தொடர்பு கொண்டு ரூ. 15.51 லட்சத்தை வென்றதாக கூறி ஸ்கிராட்ச் கார்டை அனுப்பியுள்ளனர். எதிர்பாராதவிதமான அதிர்ஷ்டம் அடைந்ததாக நம்பி அதனுடன் கடிதத்தில் இருந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுகையில். மறுமுனையில் இருந்த நபர், ஸ்கிராட்ச் கார்டின் புகைப்படங்களையும், அவரது அடையாளச் சான்றையும் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து கர்நாடகா அரசின் சட்டப்படி லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதை பெற வேண்டும் எனில், 30 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி RTGS மூலம் பணத்தை மாற்ற முயற்சித்த போது ₹18 லட்சத்தை பெண் இழந்தார். மறுபுறம் எந்த பதிலும் இல்லாததால், பதற்றமானவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.