அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபானி மேட்டோ என்ற பெண், தனது அசாத்தியமான மற்றும் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் பிசினஸ் ஐடியாக்கள் மூலம் இணையத்தில் ஒரு ‘மெகா’ கோடீஸ்வரியாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் தனது ‘வயிற்றுக் காற்றை’ (Fart) ஜார்களில் அடைத்து விற்று உலகையே அதிரவைத்த இவர், இப்போது ஒரு படி மேலே போய் தான் மென்று துப்பிய உணவை (Pre-chewed food) ஆண்களுக்கு விற்று மீண்டும் கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருகிறார்.

’90 டே ஃபியான்சே’ என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான இவரை, அவரது அநாகரீகமான வீடியோக்களுக்காக யூடியூப் நிறுவனம் தடை செய்த நிலையில், தற்போது ‘ஒன்லி ஃபேன்ஸ்’ தளத்தில் தனது விசித்திரத் தொழிலைத் தொடர்ந்து வருகிறார். இவரிடம் மென்று துப்பிய உணவை வாங்குவதற்கு என்றே ஒரு பெரிய கூட்டமே வரிசையில் நிற்கிறதாம்.

இதில் வினோதம் என்னவென்றால், செயற்கை பற்கள் வைத்திருக்கும் ஆண்கள் மற்றும் விசித்திரமான ஆசைகள் கொண்டவர்கள், ஸ்டெபானி மென்று கொடுக்கும் உணவை ஒரு நெருக்கமான உணர்வாகக் கருதி போட்டிப் போட்டுக்கொண்டு வாங்குகிறார்களாம்.

வெறும் உணவை மென்று கொடுப்பது மட்டுமின்றி, தனது காரால் ஒருவரை மோதுவது போன்ற வீடியோக்கள் மற்றும் விசித்திரமான கோரிக்கைகளை நிறைவேற்றியே இப்போது ஒரு மிகச் சொகுசான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்.

மக்கள் இதைப் பார்த்து எவ்வளவுதான் கிண்டல் செய்தாலும், தனது அட்ராசிட்டி பிசினஸ் மூலம் சொந்தமாக வீடு, சொகுசு கார் என அவர் செட்டிலாகியிருப்பது பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.