இந்த பரந்த விரிந்த உலகில் தினம் தோறும் புதுவிதமான நிகழ்வுகள் அரங்கேரி கொண்டே இருக்கின்றன. அதில் சில நிகழ்வுகள் காண்போரை வியக்க வைக்கும். மனிதர்கள் தினம் தோறும் சாத்திய மற்றதை சாத்தியமாக வேண்டும் என விரும்புகிறார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவர் மெட்ரோ ரயிலை விட வேகமாக ஓடியுள்ளார். ஒரு ஸ்டேஷனில் மெட்ரோ ரயில் நின்றதும் அந்த நபர் வெளியேறினார். ரயில் வேறொரு நிலையத்தை அடைவதற்குள் அவர் ஓடிச் சென்று அடுத்த ஸ்டேஷனில் அதே ரயிலில் ஏறினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.