தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா தலைமையிலான அஇபுதமுக (அனைத்திந்திய புரட்சித் தலைவி தமிழக முன்னேற்றக் கழகம்) வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், நான்கு முக்கியத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றியைப் பாதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் முடிவுகளின்படி, தென் மாவட்டங்களில் உள்ள நான்கு தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதற்கு அந்தத் தொகுதிகளில் அஇபுதமுக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பிரித்ததே முக்கியக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் சசிகலா தரப்பு வேட்பாளர்கள் நான்கு தொகுதிகளில் பெற்ற வாக்கு விவரங்கள்  பற்றி பார்ப்போம்.

முதுகுளத்தூர்: 40,422 வாக்குகள்
உசிலம்பட்டி: 16,620 வாக்குகள்
சாத்தூர்: 11,602 வாக்குகள்
தென்காசி: 7,715 வாக்குகள்

இந்தத் தொகுதிகளில் அஇபுதமுக வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்ததால், வெற்றி வாய்ப்பு தங்களுக்குக் கைநழுவிப் போனதாக என்.டி.ஏ கூட்டணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிட்ட சசிகலா ஆதரவு வேட்பாளர்கள் பெற்ற இந்த வாக்குகள், தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.