சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவங்கள் காணொளியாகவோ புகைபடமாகவோ வெளியாகி வைரலாகும் சிலவை பார்ப்போரை பதற செய்யும் அப்படி ஒரு காணொளி தான் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர் குச்சியை ஊன்றியபடி நடந்து ஒரு வாசலுக்குள் செல்ல முயல்கிறார்.

அந்த சமயத்தில் அதே வாசலுக்குள் காளை மாடு ஒன்று செல்ல முயற்சிக்கிறது. இதனை அந்த மூதாட்டி தான் கையில் வைத்திருந்த குச்சியால் தடுக்க முயன்று காளையை அடிக்கிறார். இதனால் கோபமடைந்த மாடு மூதாட்டியை கொடூரமாக முட்டி தூக்கி உள்ளது.

இதில் மூதாட்டி சில அடி உயரங்கள் பறந்து சென்று கீழே விழுகிறார். இந்த சம்பவம் காணொளியாக வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதை பார்த்த பலரும் மூதாட்டிக்காக அனுதாப பட்டாலும் சிலர் எதற்காக அவர் காளை மாட்டை அடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.