இந்தியாவை சேர்ந்த வினோத்குமார் சவுத்ரி (44) என்பவர் ஆங்கில எழுத்துக்களை கணினியில் டைப்பிங் செய்வதில் கின்னஸ் உலக சாதனை படைத்து இரண்டு முறை அதனை அவரே முறியடித்துள்ளார். அதாவது 2023 ஆம் ஆண்டு 27.80 வினாடிகளில் அவர் இந்த சாதனையை படைத்த நிலையில் அதே ஆண்டு இரண்டாவது முறையாக 26.73 வினாடிகளில் டைப்பிங் செய்து தனது சாதனையை மீண்டும் முறியடித்தார்.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இவற்றை விட குறைந்த நேரம் எடுத்துக் கொண்டு 25.66 வினாடிகளில் டைப்பிங் செய்து மீண்டும் தனது சாதனையை முறியடித்துள்ளார். இது குறித்த வீடியோவையும் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பகிர்ந்துள்ளது. அதில் உங்களுடைய மூக்கால் நீங்கள் ஆங்கில எழுத்துக்களை எவ்வளவு விரைவாக டைப்பிங் செய்ய முடியும் என்று தலைப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில் மூக்கை பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களை இடைவெளி விட்டு அவர் டைப்பிங் செய்கின்றார்.