திருப்பூர் கனரா வங்கியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச கணினி கணக்கியல், கணினி Tally பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. தற்போது பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கான நேர்காணல் வரும்  புதன்கிழமை நடைபெறுகிறது. 18 முதல் 45க்கு உட்பட்ட ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம். இருவருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதிகள் உள்ளது. பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படுவதோடு தொழில் தொடங்குவதற்கும் கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.