முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “எப்படி ஒரு கும்பல் ஆலயத்திற்குள் போய் பாஜக கொடியை பிடிக்கிறார்கள். எப்படி காவல்துறை அனுமதித்தது. முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? ஆறுபடைவீடு முருகனுக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அதை அனுமதிக்க கூடாது ஏன் காவல்துறை அனுமதித்தார்கள். கருவறைக்கு பக்கத்தில் வந்து பாஜக கொடியை காட்ட அனுமதிக்கலாமா? தடுத்து இருக்க வேண்டும்.

அப்போ அந்த மாவட்ட காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது. காவல்துறையின் கடமை, பொறுப்பு அது. அதற்காக முதலமைச்சர்கள் வந்து எப்படி நீ கொடியை அனுமதித்தாயா? இல்லையா? என்று கேட்க முடியும். காவல்துறை எப்படி கோவில் உள்ளே விட்டார்கள். யார் யாரெல்லாம் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் அளித்தார்களோ அதை ஒருபோதும் முருகன் ஏற்றுக்கொள்ள மாட்டார் .திருப்பரங்குன்றத்தில் இப்படி திடீரென்று இந்த சர்ச்சை எழுவதற்கு என்ன காரணம்” என்று பேசியுள்ளார்.