
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்ன சிகிச்சை என்பது சரிவர தெரியாத நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் ஓபிஎஸ் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.