
முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். இவருக்கு 84 வயது ஆகிறது. இவர் தற்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு தேபந்திர பிரதான் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை ஆவார். மேலும்அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு இந்த கடினமான காலத்தை கடக்க அவருக்கு வலிமை கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Saddened to hear about the passing of former Union Minister Thiru. Debendra Pradhan, father of Hon’ble Union Education Minister Thiru. @dpradhanbjp.
My heartfelt condolences to @dpradhanbjp. May he find the strength to get through this difficult time. https://t.co/lkpZyEgmqG
— M.K.Stalin (@mkstalin) March 17, 2025