முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெறும் நபர் முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை கண்காணிப்பாளர், துணைத் தலைவர் மற்றும் வெளியில் இருந்து பாட நிபுணர் என மூவர் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து விண்ணப்பிப்பவர்களின் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்து அது தொடர்பான பரிந்துரைகளை யுஜிசிக்கு முறையாக அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் முதுநிலை ஆராய்ச்சியாளர் விண்ணப்பத் தொகை பெறுவதற்கு தகுதியானவர் ஆகி விடுவார். மேலும் இதற்கு யுஜிசி ஒப்புதல் வழங்க வேண்டியது அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.