இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் முதல் நாள் விற்பனையில் 100% அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனை செய்ய தொடங்கிய நிலையில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிப்போட்டி கொண்டு இந்த போனை வாங்கி சென்றனர். இந்த நிலையில் உள்நாட்டில் தயாரான ஐபோன் 14 சீரிஸை ஒப்பிடுகையில் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை 100% அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.