நாட்டின் முன்னணி ஓடிடி செய்திகளில் ஒன்றாக உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி மாதாந்திர கட்டணம் 299 ரூபாய் முதல் ஒரு வருட கட்டணம் 1499 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அமேசான் பிரைம் நிறுவனம் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்க்க கூடுதல் கட்டணங்களை வசூல் செய்ய உள்ளதாக புதிய சந்தாக்களை அறிவித்துள்ளது.

அதன்படி விளம்பரங்களுடன் வீடியோக்களை தொடர விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் எனவும் விளம்பரம் இல்லாத வீடியோக்களுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 248 ரூபாய் வசூல் செய்யப்படும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் கடந்த வருடம் விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்க்க 912 ரூபாய் வரை மாதம் வசூல் செய்து வந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த புதிய விலை உயர்வை அறிவித்துள்ளது.