உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது, HD வீடியோக்களை பயனர்களுக்கு பகிர்வது மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் காலை மியூட் செய்வது போன்ற ஏராளமான அப்டேட்டுகள் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதியிலிருந்து ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருவதால் ஆண்ட்ராய்டு 4.1 உள்ளிட்ட சாதனங்களில் அந்த தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.