வடகொரியாவில் நடந்த பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட கிம் உரையாற்றிய போது தென்கொரியா பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் பேசியது “எங்கள் முதல் எதிரி தென்கொரியா தான். ஒருவேளை போர் தேவைப்படுமானால் அதனை தவிர்க்கக்கூடாது.

வடகொரியா தென் கொரியாவுடன் இணையும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. இரண்டு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியாக வரையறுக்கப்பட வேண்டும். தென்கொரியா தான் வடகொரியாவிற்கு பிரதான எதிரி என்பதை மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தையும் மாற்றலாம்.

போரை விரும்பவில்லை என்றாலும் போரில் ஈடுபடுவதற்கு தயங்க கூடாது. வடகொரியா தென்கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க தயாராக இருக்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை துண்டிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.