
பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்வாரா என்று குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணி இன்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா கூறியதை குறிப்பிட்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் சவால் விடுத்திருந்தார்.