தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் பதவியேற்பு விழாவில், அவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகள் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராக விஜய் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். ஒரு நடிகராக இருந்து மாநிலத்தின் உயரிய பதவியை அவர் எட்டிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், அவரது குடும்பத்தினர் அருகில் இல்லாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகிய மூவரும் இந்த விழாவில் தென்படவில்லை.
இந்நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தை விஜய்யை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை (Unfollow) நிறுத்திவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. தந்தை ஒருபுறம் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், மகன் அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் எந்த வாழ்த்துப் பதிவும் இடாதது, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற யூகங்களை வலுப்படுத்தியுள்ளது.
குடும்பம் குறித்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்க, தனது பிள்ளைகளின் சுதந்திரம் குறித்து விஜய் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், “என் பிள்ளைகள் எதைச் செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்களுக்குத் தேவையான ஆதரவை மட்டுமே நான் வழங்குவேன். கேமராவுக்கு முன்னால் இருப்பதா அல்லது பின்னால் இருப்பதா என்பதை ஜேசன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.
ற்போது 25 வயதாகும் ஜேசன் சஞ்சய், இயக்குநராகத் தனது முதல் படமான ‘சிக்மா’ (Sigma) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படம் 2026-ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக விஜய் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தனிப்பட்ட முறையில் குடும்பத்தினர் விலகி இருப்பது குறித்து குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
