தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை கடந்த மார்ச் 1ஆம் தேதி கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து முதல்வருக்கு 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்க திமுக தொழில்நுட்ப பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. அதுமட்டுமல்லாமல் என்ற இணையதளத்தில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து முதல்வருடன் விசுவல் செல்பி எடுக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க 21,67,411 போன் கால்கள் வந்துள்ளன. மேலும் திமுகவில் ஐடிவிங் உருவாக்கிய செல்ஃபி வித் சிஎம். காம் என்ற இணையதளம் மூலம் 16,75,484 பேர் செல்பி எடுத்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஸ்டாலின் பிறந்த நாளில் இவ்வளவு பேர் வாழ்த்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாம். இதனை அறிந்த அவர் மிகவும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.