சென்னையில் இருந்து பிட்ரகுண்டா செல்லும் ரயில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிட்ரகுண்டாவுக்குதிங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4.30 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு காலை நான்கு மணி 45 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் மார்ச் 4-ம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே தினம் தோறும் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் விஜயவாடாவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நெல்லூர் வரை மட்டுமே இயக்கப்படும். பின்னர் மருமார்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.10 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நெல்லூரில் இருந்து புறப்படும். இந்த தேதிகளில் சென்னை சென்ட்ரல் மற்றும் நெல்லூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.