தமிழக அரசின் வலுவான வாதங்களால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி ,சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு  உடன் இருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர், தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று வலுவான வாதத்தை முன் வைத்ததால் நீதி வென்றது என தெரிவித்தனர்.

ஆலையை திறக்கலாமா என ஆராய குழு அமைக்க உச்ச நீதிமன்றம் முன்வந்த போது கடுமையாக எதிர்த்தது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசின் வலிமையான சட்ட போராட்டத்தில் ஆலையை மூடியது சரிய என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.