
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் தமிழக அரசின் வெள்ள தடுப்பு பணிகளை ஆளுநர் ரவி பாராட்டியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, முதல்வரும் ஆளுநரும் புது காதலர்கள் போன்று ரொம்பவும் இணக்கமாக இருக்கிறார்கள். புது கதாநாயகனும் கதாநாயகியும் சந்தித்துக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அப்படி பேசி கொள்கிறார்கள். முதலில் ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டு பின்னர் முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் சென்று விருந்தில் கலந்து கொண்டார்கள்.
முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த நிலையில் 7000 கோடியை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. முதலில் ஆளுநர் மக்களுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் தற்போது மாறிவிட்டார். மேலும் இது என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்று கூறினார். முன்னதாக ஆளுநர் ரவி செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அரசின் வெள்ள தடுப்பு பணிகளை பாராட்டி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.