அசாம் மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இப்போது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மக்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண் திடீரென முதல்வருக்கு முத்தம் கொடுத்தார்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவத்தால் அந்த இடமே ஒரு நிமிடம் திகைப்பில் ஆழ்ந்தது. முதல்வரின் பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த இடத்தைச் சூழ்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இது ஒரு “அநாகரிகமான செயல்” என்றும், தேர்தல் பிரச்சாரக் களத்தில் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

முதல்வரின் பாதுகாப்பு மற்றும் பொதுவெளியில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் குறித்து இந்த வீடியோ இப்போது பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.