தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கமே அதிரும் வகையில் நடந்த இந்த விழாவில், ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது நடிகை த்ரிஷாவின் வருகைதான். நீல நிறப் புடவையில் தேவதை போல வந்திறங்கிய த்ரிஷா, விஜய்யின் அம்மா மற்றும் சகோதரியைக் கட்டிப்பிடித்து தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார்.
VIDEO | Chennai: Actor Trisha Krishnan warmly greets TVK chief Vijay's sister and mother as she arrives at Jawaharlal Nehru Indoor Stadium for his swearing-in as Tamil Nadu CM.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tePCyk9uHa
— Press Trust of India (@PTI_News) May 10, 2026
விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் தனது மகன் முதல்வரானதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். “இன்று அன்னையர் தினம், இந்த நாளில் என் மகன் முதலமைச்சராகி எனக்கு ஒரு மிகப்பெரிய பரிசை கொடுத்துவிட்டான்” என அவர் நெகிழ்ச்சியுடன் பேசியது அங்கிருந்தவர்களை உருக வைத்தது. நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் விஜய்யின் இந்த கடினமான பயணத்தைப் பாராட்டிப் பேசினர். பல தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அரசியல் சவால்களைத் தாண்டி, இன்று தமிழகத்தின் முதல்வராக விஜய் அரியணையில் ஏறியிருப்பது அவரது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
विजय थलापति की माँ शोभा चंद्रशेखर का भावुक कर देने वाला बयान ,
" आज में बहुत खुश हूं , आज मुझे मातृ दिवस पर मेरे बेटे ने मुख्यमंत्री बनकर गिफ्ट दिया है , ये मेरे लिये नहीं बल्कि पूरे तमिलनाडु के लोगो के लिये गर्व की बात है " ,pic.twitter.com/P17aN0rV8h
— Nargis Bano (@Nargis_Bano78) May 10, 2026
