ராஜஸ்தான் மாநிலம் குச்சமன் பகுதியில் உள்ள மொபைல் கடைக்கு கல்லூரி மாணவி ரீசார்ஜ் செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது கடையில் இருந்தவர் முதலில் தனக்கு ஐ லவ் யூ சொல்ல வேண்டும் அதன் பிறகு தான் ரீசார்ஜ் செய்ய முடியும் என கூறிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த அவர் தனது சக நண்பர்களிடம் கூற அவர்கள் மாணவியிடம் ஐ லவ் யூ கேட்ட நபரை கடுமையாக தாக்கி பாடம் புகட்டினர். அதோடு அவர்கள் அந்த நபரை காவல்துறையினிடமும் ஒப்படைத்தனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.