
தாய்லாந்து நாட்டில் மிருகக்காட்சி சாலையில் பயிற்சியாளர் ஒருவரின் கையை முதலை ஒன்று கவ்விய காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது. சியாங் ராயில் உள்ள புகழ்பெற்ற ஃபோக்காதாரா முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலையில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது . இது குறித்த வீடியோவில் பயிற்சியாளர் ஒருவர் தனது கையை முதலையின் வாயில் நுழைக்கின்றார். பின்பு படிப்படியாக தனது கையை அதன் தொண்டை வரை கொண்டு செல்கின்றார்.
அப்போது நொடிப்பொழுதில் தனது தாடையால் மூடி அவரது கையை கவ்வியுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நபர் முதலையிடமிருந்து கையை சட்டென்று எடுத்துள்ளார். இதனால் சிறிய காயத்துடன் தப்பித்துள்ளார். இது பழைய வீடியோ என்று கூறப்பட்டாலும் தற்போது இது வைரலாகி வருகின்றது.
— Fck Around N Find Out (@FAFO_TV) August 26, 2023