மக்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முக்கியமானது. மத்திய அரசு தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டியை கொடுக்கிறது. பிஎப் கணக்கில் பணத்தை வருடத்திற்கு ஒரு முறையாவது டெபாசிட் செய்ய வேண்டும் . ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிஎப் கணக்கில் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். அந்த பணத்தை தவணைகளாக டெபாசிட் செய்யலாம். ஒரு வருடத்தில் ppf கணக்கில் குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும்.

15 வருடங்களில் பிஎப் கணக்கு முடிவுக்கு வருகிறது என்றால், நீங்கள் விரும்பினால் மேலும் 5 வருடத்திற்கு நீட்டிக்கலாம். நீங்கள் எந்த வங்கிகளும் இந்த கணக்கை திறக்கலா.ம் விரும்பினால் தபால் அலுவலகத்திற்கு சென்றும் திறந்து கொள்ளலாம். பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு வருடமும் 50,000 டெபாசிட் செய்தால் 20 வருடங்களுக்கு பிறகு மொத்தமாக 34, 36,500 ரூபாய் கிடைக்கு. இதில் முதலீட்டு தொகை 12 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். வட்டி தொகை 21,81,000 ஆகவும் இருக்கும்.