நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், அவருடைய தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் நடிகை மீனாட்சி சவுத்ரி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், விஜய்யின் தொழில்முறை ஒழுக்கத்தை வியந்து பாராட்டினார். “காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால், சரியாக அந்த நேரத்திற்குத் தளத்தில் இருக்கும் விஜயைப் போல ஒரு ஒழுக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை; அவர் மற்றவர்களின் நேரத்தை எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய்யின் எளிமை மற்றும் பண்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியபோது, அவர் உடனடியாகப் பதிலளித்தது தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகக் கூறினார். “பதிலளிக்க சில நாட்கள் ஆகும் என்றுதான் நினைத்தேன், ஆனால் அவர் உடனே ‘தேங்க்யூ’ என்று மெசேஜ் அனுப்பியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறி, அவரது பணிவான குணத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
