சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றவை உள்ளடக்கியது. கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தகுதியுடைய நபர்கள் இணையதளம் மூலமாக மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.