ஹிமாச்சல் பிரதேசத்தின் உனா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளிடம் “முதலாவது விண்வெளி பயணம் செய்தவர் யார்?” என்று கேட்டபோது, அவர்கள் ஒரே மாதிரி “நீல் ஆம்ஸ்ட்ராங்” என ஆர்வத்துடன் பதிலளித்தனர். உடனே அதை மறுத்த தாக்கூர், “எனக்குத் தோன்றுவது ஹனுமான் ஜி தான் விண்வெளி பயணத்துக்கு முதலில் சென்றவர்” எனக் கூறினார். இந்தக் கருத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மத்தியில் பெரும் கிசுகிசுவை ஏற்படுத்தியது.
அவர் தொடர்ந்து, “நாம் இன்று வரை ஆங்கிலேயர்கள் காட்டிய வரலாறையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஆயிரக்கணக்கான வருட பழமையான பாரம்பரியம், வேதங்கள், கலாசாரம் குறித்து அறிந்தால் வேறு பல உண்மைகளை உணரலாம்” எனவும், ஆசிரியர்கள் பாடப்புத்தகத்திற்குப் புறம்பாகவும் நம் பாரம்பரியத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ये भाजपा के 5 बार के सांसद अनुराग ठाकुर हैं
ये हिमाचल प्रदेश में स्कूल के बच्चों के सामने बोल रहे हैं कि, पहले अंतरिक्ष यात्री ‘हनुमान जी’ थे !
इनलोगों का सही है, देश के बच्चों अनपढ़ रखो, खुद के बच्चों को विदेश में अच्छी से अच्छी शिक्षा दो pic.twitter.com/j3eYUVb2J8
— Nigar Parveen (@NigarNawab) August 24, 2025
“>
இதேவேளை, நிஜத்தில் விண்வெளி பயணம் செய்த முதல் நபர் ரஷ்ய வீரர் யூரி ககரின் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் 1961 ஏப்ரல் 12 அன்று வோஸ்டோக்-1 விண்கலத்தில் புறப்பட்டு, உலகின் முதல் விண்வெளி வீரராகப் பெயர் பெற்றார். அதேசமயம், நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஜூலை 20 அன்று அப்பல்லோ 11 பயணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்த முதல் மனிதராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
Can you believe this? He is a member of Parliament & BJP leader 🤦
Anurag Thakur : Who was the first person to travel to space?
Students: Neil Armstrong
Anurag Thakur : No, it’s Hanuman.No wonder they are busy closing schools and changing textbooks.pic.twitter.com/mR9z3UZvDb
— D (@Deb_livnletliv) August 24, 2025
“>
சமூக வலைதளங்களில் இந்தக் காணொளி வைரலாகி, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். “குழந்தைகளுக்கு தவறான அறிவை கொடுக்கக்கூடாது” என்றும், “வரலாறும் புராணமும் தனித்த இடத்தில் இருந்தாலும் கல்வியில் உண்மை மற்றும் அறிவியல் மட்டுமே இருக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது ஹமீர் பூர் தொகுதியிலிருந்து 5-வது முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுராக் தாக்கூர், மத்திய அரசில் விளையாட்டு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
