
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக வலைதளத்தில் பல்வேறு வதந்திகளும் பரவியது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் நாயின் உடல் இருந்தது. அதன் பிறகு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.