முட்டை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்பட்டு உட்கொள்ளப்படும் ஒரு சிறந்த உணவாகும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் முட்டையைத் தவிர்ப்பது நல்லது.

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் முட்டையை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால், அது உடலில் தேவையின்றி எடையை மேலும் அதிகரிக்கக் காரணமாகிவிடும்.

முட்டை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும் பழக்கம் உள்ளவர்கள் அதை அறவே தவிர்க்க வேண்டும். ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் முட்டையைச் சாப்பிடும் போது வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் சருமப் பிரச்சனைகள் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் முட்டையை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். முட்டையில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, இதய நோய் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

அதேபோல், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களும் முட்டையைத் தவிர்ப்பது அவசியமாகும். முட்டையில் அதிக அளவில் உள்ள புரதச் சத்து, பாதிப்படைந்த சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து அவற்றின் செயல்பாட்டை மேலும் பாதிக்கக் கூடும்.