நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்திருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசித்து பணிகளை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கின்றது.
இந்த நிலையில் தனக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதற்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். “உங்க வேலைய ஒழுங்கா செய்யுங்க, சினிமா துறைக்கு நிறைய தேவை இருக்கு. இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் மெயின்டனன்ஸ் கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியது இருக்கிறது. விஷால் தொடர்ந்து படமெடுப்பார், முடிந்தால் தடுத்து பாருங்கள்” என அவர் பதிவிட்டு இருக்கின்றார்.
