இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டை மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டியுள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது யுடியூப் சேனலில் பேசியதாவது, ருத்து பயங்கரமான பிளேயர்னு எங்க பார்த்தாலும் நியூஸ் போய்கிட்டு இருக்கு. ருத்து பயங்கரமான பிளேயர்.. வேற மாதிரி பிளேயர்.. ருத்து மட்டும் வெஸ்ட் இண்டீஸ்-ல நெட்ஸில் ஆடிய எல்லா நாளும் சைடுல நின்னு நான் பார்த்து இருக்கேன்.. எக்ஸ்ட்ரானரி பொசிஷன்.. அத எப்படி எக்ஸ்பிளைன் பண்ணனும்னு எனக்கு தெரியல.. அவருக்கு ஒரு இனிசியல் மூவ்மெண்ட் இருக்கு.. அந்த இனிசியல் மூவ்மெண்ட் டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்கும்.. நம்ம பிரபுதேவா வந்து முக்காலா அப்படின்னு ஆடுற மாதிரியே போயிடுவாரு நகருதே தெரியாது..

லெப்ட் ஹேண்டால (இடது கை) பேட் பியூட்டிஃபுல்லா மேல போகும்.. இன்னைக்கு பேட்டிங் ஆடுற எத்தனையோ எனக்கு தெரிஞ்ச எல்லா கிளப் கிரிக்கெட்டர்ஸ்க்கு அதான் சொல்லுவேன்.. டாப் ஹேண்ட் கண்ட்ரோல் ஃபார் த பேட்ஸ்மேன் மோஸ்ட் இம்பார்டண்ட்.. அவருக்கு அந்த டாப் ஹேண்ட் வந்து எதோ நம்ம ஆச்சாரி எல்லாம் வந்து இழைப்பாங்க இல்ல, அதே மாதிரி டாப் ஹேண்ட் அழகா இளைச்சுட்டு பேட்ட கீழ எடுத்துட்டு வருது.. எல்லாமே அவரது பேட்டிங் எல்லாமே டிசைன்.. அது ஒரு டிசைன் யாரோ ஒருத்தர் டிசைன் பண்ணி அவரை அனுப்பி இருக்காங்க அவரோட பேட்டிங்க சைடுல உட்கார்ந்து நெட்ஸ்ல பார்க்கலாம்.. யாரோ வந்து ருது இன்னைக்கு புல் டே நெட்ஸ்ல ஆட போறாரு ஒரு 50ரூபா, 100 ரூபா கொடுத்து பாக்குறீங்களா என்றால் கண்டிப்பா நான் பார்ப்பேன். நல்ல பேட்ஸ்மேன் என்றார்..

அதாவது “ருதுராஜ் கெய்க்வாட் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். பிரபுதேவா நடனமாடுவதை போல அவரது அசைவுகள் க்ரீஸில் அழகாக இருக்கும். ருதுராஜ் எந்த சிரமமுமில்லாமல் பேட்டிங் செய்ய பிறந்த நட்சத்திரம். நெட்ஸில் பேட்டிங் ஆடும்போது, அவரது பேட்டிங்கை பார்க்க யாராவது பணம் கேட்டால் ஒரு நாள் முழுவதும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை பார்க்க தயாராக இருப்பேன்’ என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரங்களில் ஒருவராக கருதப்படும் ஒரு பேட்ஸ்மேன் தான் 26 வயதான ருதுராஜ் கெய்க்வாட் . வலது கை பேட்ஸ்மேன், ருது, அஸ்வின் குறிப்பிட்டு சொன்னதை போல, ஸ்ட்ரோக்குகளை எளிதாக ஆடும் ஒரு துவக்க ஆட்டக்காரர். 2016-17 சீசனில் விஜய் ஹசாரே டிராபி மூலம் முதலில் தேசிய கவனத்திற்கு வந்த ருதுராஜ், ஏற்கனவே முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் மிகச்சிறந்து விளங்கினார்.

டீம் இந்தியா மற்றும் மேற்கு மண்டலத்தைத் தவிர, உள்நாட்டு கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ருதுராஜ் இந்தியா ஏ அணிக்கு முக்கியமான பேட்ஸ்மேனாகவும் இருந்தார். சீனியர் அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தேசிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 27 ரன்களும், டி20 போட்டிகளில் 154 ரன்களும் எடுத்தார். ஐபிஎல்லில், சிஎஸ்கே அணியின் நட்சத்திரம் ருதுராஜ் 52 ஆட்டங்களில் 39.07 சராசரியிலும், 135.52 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சதம் உட்பட 14 அரைசதங்களுடன் 1797 ரன்கள் எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் நட்சத்திர வீரர் ஆவார். இந்திய அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக ருதுராஜ் உள்ளார். 2022 விஜய் ஹசாரே டிராபியில், மகாராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ruturaj Gaikwad is born to make batting looks easy – Ravichandran Ashwin 🔥#WhistlePodu #TeamIndia #CSKpic.twitter.com/G6YLmun5HU
— CSK Fans Army™ (@CSKFansArmy) August 19, 2023
