
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதோடு பெற்றோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சோன்பத்ரா என்ற பகுதியில் ஒரு தெருவோர வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ நாளில் வீட்டில் மீன் குழம்பு வைத்திருந்த நிலையில் அந்த குழம்பு சட்டியில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்த உயிரிழந்தது. இதேபோன்று கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அவர்களின் மூத்த மகளும் வியாபாரத்திற்காக தயார் செய்த பட்டாணி பருப்பு சட்டியில் விழுந்த உயிரிழந்தார். ஒரே பாணியில் இரண்டு குழந்தைகளையும் இழந்து பெற்றோர் வேதனையில் இருக்கும் நிலையில் இந்த துயரத்தை கண்ட அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். முன்னதாக குழந்தையின் தாய் சமையல் செய்துவிட்டு வெளியே சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிரியா எதிர்பாராத விதமாக குழம்பு சட்டியில் விழுந்து கதறி துடித்தது. உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த அவர் தன் குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டி சென்ற நிலையில் தீக்காயம் அதிகமானதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது பற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் பெற்றோர் இறுதி சடங்கு செய்த நிலையில் அதன் பிறகு போலீசார் வந்து குழந்தையின் மரணம் குழம்பு சட்டியில் விழுந்ததால் தான் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.