
இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு இந்த நிறுவனம் ஒருநாள் விடுமுறை அறிவித்தது.
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியாவின் மோசமான தோல்வி இந்திய அணியின் கனவை உடைத்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களையும் உடைத்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பேட்ஸ்மேன் விராட் கோலியும் கண்களில் கண்ணீர் வழிந்த போது, ரசிகர்களால் கூட அழுகையை நிறுத்த முடியவில்லை. இந்த சோகத்தை மறக்க, ஒரு குருகிராம் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் இதயத்தை உடைக்கும் தோல்விக்குப் பிறகு, குருகிராம் சார்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தது. ஊழியர்கள் மீண்டும் வலுவாக திரும்ப இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, குருகிராமில் உள்ள மார்க்கெட்டிங் மூவ்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தீக்ஷா குப்தா, LinkedIn இல் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘இன்று (20ஆம் தேதி) காலை, இந்த தோல்வியின் தாக்கம் காரணமாக அனைவருக்கும் ஒரு நாள் விடுப்புத் தளர்வு அளிக்கும் என் முதலாளியின் செய்தியுடன் நான் எழுந்தேன். அதிகார்வப்பூர்வ மின்னஞ்சல் வரும் வரை எங்களில் யாராலும் நம்ப முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.
தீக்ஷா குப்தா தனது முதலாளி சிராக் அலாவ்தி அனுப்பிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார், அதில் ‘ஹாய் டீம்! நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்வியைக் கருத்தில் கொண்டு, எங்கள் அணி உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த நேரத்தில் ஆதரவை வழங்க, நிறுவனம் ஒரு நாள் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது. இது அனைவருக்கும் மீண்டும் ஒருங்கிணைத்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கும் என நம்புகிறோம். வலுவாக மீண்டு வருவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு நவம்பர் 20 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, அது வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளானது. சில பயனர்கள் நிறுவனத்தின் உணர்வை பாராட்டினர்..மேலும் #MondayestMondayEver என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வேகமாகப் பிரபலமடைந்தது, ஏராளமான பயனர்கள் தோல்வியிலிருந்து மீண்டு வர தேசிய விடுமுறைக்காக வாதிட்டு கருத்துக்களை தெரிவித்தனர்..
Boss ne sach me leave de di aaj😭
Healing Monday 🥹@iMarketingMoves #marketingmoves #INDvsAUS pic.twitter.com/Jc6M20Sia3— Diksha Gupta (@thedikshagupta) November 20, 2023