தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரைக்காகத் திருப்பூர் மாவட்டத்திற்குச் வருகை தந்துள்ள நிலையில், அங்கு நிலவும் கடும் வெயில் மற்றும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யைக் காணப் பரப்புரை நடக்கும் இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்ததோடு, பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் நிலவும் இந்த அனல் பறக்கும் அரசியல் சூழலும், கூட்ட நெரிசலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.