
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று பெய்த அதிக கனமழையால் நெல்லையின் பல பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.