ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 6.83 சதவீதமாக பதிவாகியிருக்கிறது. சராசரியாக 4% மட்டுமே இருக்க வேண்டிய பணவீக்கம் கொரோனாவுக்கு பின்னர் எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால் கடன் வாங்கியோர், கடன் வாங்குவோர் என அனைவரும் அதிக வட்டியால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.